Tuesday, December 1, 2009

மலேசியாவில் இந்துக் கோயில் இடிப்புகள்: பெரும் அபாயம்
இந்த வருட ஆரம்பத்திலிருந்து 69 கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. மூன்று வாரத்திற்கு ஒரு கோயில் என்ற கணக்கில் இந்த இடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலானவை 100 வருடத்திற்கும் மேல் பழமையான கோயில்கள். இந்துக்களின் உரிமைக்காகப் போராடி வரும் Hindraf என்ற அமைப்பு அரசுக்கும், பிரதமருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஏகப்பட்ட கோரிக்கைகளைக் கொடுத்தும், எத்தனையோ மறியல்கள் செய்தும் இடிப்புகள் நின்றபாடில்லை.அரசின் கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் நகர் விரிவாக்கம் என்றெல்லாம் முதலில் ஒன்றிரண்டு கோயில்கள் இடிக்கப் படுகையில் சொல்லப் பட்ட போது அப்பாவியாக நம்பிய தமிழ் மக்கள் விரைவிலேயே இது மலேசிய இந்து சமயத்தின் மீதும், இந்து மக்கள் மீதும் நடத்தப்படும் குறிவைத்த தாக்குதல் என்பதை உணர்ந்து கொண்டார்கள். பொது நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களில் கட்டப் பட்டிருந்த சிறு சிறு குலதெய்வக் கோவில்களெல்லாம் கூட எந்த சரியான காரணமும் தரப் படாமல் இடிக்கப் படுகின்றன.இந்த 10 நிமிட தமிழ் வீடியோவைப் பாருங்கள். தங்கள் கோயில்கள் குறிவைத்து இடிக்கப் படுவது அறிந்த கோபம், வலி, ஆற்றாமை, இஸ்லாமிய அரசால் வஞ்சிக்கப் படுவது பற்றிய புரிதல் எல்லாம் அதில் வெளிப்படுகிறது. இவர்கள் அனைவரும் காலம் காலமாக சட்டத்தை மதிக்கும், அமைதியோடு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள். இஸ்லாமிய அரசையும் அதிகாரத்தையும் 'சேலஞ்ச்' செய்யக்கூடியவர்கள் அல்ல, அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். ஒரு இஸ்லாமிய அரசு தன் உண்மையான முகத்தை இப்போது காட்டத் துவங்கியதும் கலங்கிப் போயிருக்கிறார்கள்.மென்-இஸ்லாமிய அரசு என்று நம்பப்படும் மலேசிய நாட்டு அரசு நிர்வாகமும், அதிகாரமும் ஜிகாதிகளால் வெகு வேகமாகக் கடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவில் இடிப்புகள் வரப்போகும் மிகப் பெரிய இந்து வெறுப்பு பரப்பல் மற்றும் இனப் படுகொலைக்கான முன் தயாரிப்பு - இதில் துளியும் சந்தேகமில்லை. தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்கள் கண்முன்னால் இடியுண்டு விழுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள் கூட்டத்தின் மனநிலை எப்படியாகும் என்று எண்ணிப் பாருங்கள் - ஜிகாதிகளின் கூர்மையான திட்டத்தின் முதல் பகுதி இது. கோவில்கள் இடிப்பைப் பார்த்துக் கலங்கி அழும் குழந்தைகள், தாய்மார்களின் கண்களில் அந்த பயம் தெரிகிறது.. "நாம வணங்கற தெய்வத்த ஆம்பர் வெச்சு அடிச்சு உடைக்கறான் சார்".. "என்ன தமிளன்னா இளிச்சவாயனா.. இந்து மதம்னா அவ்வளவு மட்டமா போச்சா.".."ஏன்யா, இடிக்கறதுக்கு முந்தி அந்தக் கோயில வேற எங்கயாவது மாத்துன்னு சொன்னா நாங்க செய்யாமலா இருக்கப் போறோம்".. முனியாண்டி, குணாளன், பழனிச்சாமி, சுப்பிரமணியன் போன்ற எண்ணற்ற மலேசியத் தமிழர்களின் உள்ளக் குமுறல்களை அந்தப் படம் காட்டுகிறது.
இவ்வளவு பெரிய அளவில் நடக்கும் கோயில் இடிப்பு பற்றிய செய்திகள் தமிழ் நாட்டு ஊடகங்களில், மற்ற இந்திய ஊடகங்களில் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப் படுகின்றனவா? இல்லை திம்மித்தனத்தில் ஊறிய பயத்தால் இந்தச் செய்திகளை வெளியிட பயமா?இந்து மதத்தின் மீதான மலேசிய முஸ்லீம் வெறியர்களின் தாக்குதல் இது. இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளையும் இதன் பின்னணியையும் இந்திய மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த அநியாயத்தை எதிர்த்து இந்திய மக்கள் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?
செய்தி உதவி :http://www.malaysiakini.tv/?cat=8
Language : Tamil
In this special Tamil video feature malaysiakini.tv looks into the controversies surrounding the demolition of Hindu temples in the country. According to Hindu Rights Action Force (Hindraf) an average of one Hindu temple is demolished in every three weeks. The organisation says that since February this year, a total of 69 temples have been demolished or threatened to be demolished by the authorities. Many of these temples are more than one hundred years old. In addition, at least six temples in Shah Alam, Selangor have been forced to relocate.Hindraf says that the demolition are unconstitutional and causes disharmony and dissent amongst the Hindus in the country. Hindraf has given various notes of appeals and memorandums to state leaders, political leaders and even to the Prime Minister. They hope the prime minister can take an active step in halting demolition of the Hindu temples. In this 10-minute video feature, malaysiakini.tv looks into the issue and talks to the affected people.Watch the 10-minute clip.Indrani Kopal

No comments:

Post a Comment